யூதர் என்பதால் பக்கத்து வீட்டுக்காருக்கு சரமாரி கத்திக்குத்து! - கொல்ல முற்பட்ட நபர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
யூதர் என்பதால் பக்கத்து வீட்டுக்காருக்கு சரமாரி கத்திக்குத்து!  கொல்ல முற்பட்ட நபர் கைது!!

நபர் ஒருவர் தனது அண்டை வீட்டில் வசிக்கும் நபர் ஒருவரை கொல்ல முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை Bourdon,  (Abbeville மற்றும் Amiens நகர்களுக்கு இடையே உள்ள சிறு கிராமம்) எனும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழம, நபர் ஒருவர் கூரான கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் யூதர் ஒருவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார். குறித்த யுதரை, எட்டு தடவைகள் கத்தியால் குத்தியுள்ளார். முகத்திலும் சில வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. 
 
இச்சம்பவத்தில் மற்றுமொரு நபர் தலையிட்டு, காவல்துறையினரை வரவழைத்தனர். காயமடைந்த 58 வயதுடைய நபரை உயிருக்காபத்தான நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 
 
தாக்குதல் நடத்திய 18 வயது நபருக்கும் கைகளில் காயமேற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் அறியமுடிகிறது. தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இன்றி, வெறுமனே ஒருவர் யூதர் என்பதாக் அவரை கொல்ல முற்பட்டதால் இச்செய்தி பெரும் பரபரபுக்கு உள்ளாகியுள்ளது. 

மூலக்கதை