தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை!

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை!

இலங்கையர் ஒருவருக்கு தமிழகத்தில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 
சென்னையில் தமது வங்கி காப்பகத்தில் இருந்து 10 வருடங்களுக்கு முன்னர் 1.14 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டமை தொடர்பாக, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் அவருக்கு 3 லட்சம் இந்திய ரூபாய்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 
எம்.அசோக்குமார் என்ற அவர் ஏலவே பிரிதொரு குற்றத்துக்காக 11 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
 
இந்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு சபையினால் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் திகதி திருவான்மியூர் பகுதியில் வைத்து மீட்கப்பட்ட 44.8 கிலோ கிராம் ஹெரோயின் உடன் கைது செய்யப்பட்டார்.
 
அந்த வழக்கில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார்.
 
பின்னர் 2009ம் ஆண்டு ஃபெப்ரவரி மாதம் அவரது வங்கி காப்பகம் ஒன்றில் இருந்து 1.14 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டமைக்காக, அவருக்கு நேற்றைய தினம் 30 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை