ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை! - அதிர்ச்சி தகவல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை!  அதிர்ச்சி தகவல்!!

ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துகொள்வதாக காவல்துறை சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 
 
கடந்த ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை கடந்தவருடத்தை விட கணிசமாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் மூன்று காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 
 
ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை மொத்தமாக 24 அதிகாரிகள் தமது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என காவல்துறை சங்கம் அறிவித்துள்ளது. 
 
CFDT காவல்துறை தொழிற்சங்க பொது மேலாளர், Denis Jacob தெரிவிக்கும் போது, <<ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒரு அதிகாரி எனும் கணக்கில் தற்கொலைகள் இடம்பெறுகின்றது. இது மிக மிக அதிகமாகும். கடந்த வருடத்தில் இந்த அளவான தற்கொலை ஓகஸ்ட் மாதத்தில் தான் தொட்டிருந்தது>> என அவர் குறிப்பிட்டார். 
 
1996 ஆம் ஆண்டு 70 அதிகாரிகளும், 2000 ஆம் ஆண்டில் 54 அதிகாரிகளும், 2005 இல் 50 அதிகாரிகளும், 2008 ஆம் ஆண்டில் 49 அதிகாரிகளும், 2014 ஆம் ஆண்டில் 55 அதிகாரிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

மூலக்கதை