கின்னஸ் சாதனை படைத்த இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லே தம்பதியர்!

PARIS TAMIL  PARIS TAMIL
கின்னஸ் சாதனை படைத்த இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லே தம்பதியர்!

இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் ரசிகர்களின் ஆதரவைக் குவித்த பிரிட்டன் இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லே தம்பதியின் சாதனையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

 
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்லே தம்பதியர் கடந்த செவ்வாய்க்கிழமை தான் தங்களுக்கான இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினர்.
 
தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதியருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கதைத் தொடங்கிய உடனேயே 1 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக இணைந்தனர்.
 
“”sussexroyal”” என்ற இந்த அரசவை தம்பதியரின் இன்ஸ்டாகிராம் கணக்கு படைத்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகம் இச்சாதனையை ஏற்றுக்கொண்டுள்ளது. இரண்டே நாளில் தற்போது 3.4 மில்லியன் ஃபாலோயர்கள் இந்த ராஜ குடும்பத்து தம்பதியரை பின் தொடர்கின்றனர்.
 
இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கியது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடத்தான் என இந்தத் தம்பதியர் சஸ்பென்ஸும் கொடுத்துள்ளனர்.

மூலக்கதை