பொலிஸார் முன் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்!

PARIS TAMIL  PARIS TAMIL
பொலிஸார் முன் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்!

அமெரிக்காவில் பொலிஸ் நிலையம் முன் வைத்து மனைவியை சுட்டுக்கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
அமெரிக்காவை சேர்ந்த ப்ரெண்டா ரெடெரியா (27) என்கிற தாய், கணவனிடம் இருக்கும் மகளை வாங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
 
அங்கு குழந்தையுடன் வந்த ஜேக்கப் மூன் (30), பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் தன்னுடைய மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
அப்போது திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்த ஒரு காரில் தப்பியுள்ளார் .
 
இந்த சத்தம் கேட்டு பொலிஸ் நிலையத்திலிருந்து வேகமாக வெளியில் வந்த பொலிஸார், தப்பி சென்ற ஜேக்கப்பை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். 3 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் குற்றவாளியை கைது செய்தனர்.
 
இதற்கிடையில் குற்றவாளியின் பேஸ்புக் பக்கத்தை சோதனை செய்யும்போது, "என்ன நடந்தாலும், நான் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்" என குழந்தையின் புகைப்படத்துடன் பதிவிட்டிருப்பதை பார்த்தனர். அதேசமயம் குற்றவாளி 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு வழக்கில் கைது செய்யப்ட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
 
இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியமான ப்ரெண்டாவின் உறவினர் பெண், குழந்தை மாற்றிக்கொள்ள முதலில் ஹாதோர்ன் பகுதியை தான் தேர்வு செய்தோம். இந்த இடம் இருவரின் வீட்டிலிருந்து சமதொலைவில் உள்ளது. ஆனால் கணவரின் மீது இருந்த பயத்தால் தான் இடத்தை மாற்றினார் என தெரிவித்துள்ளார்.
 
 
 

மூலக்கதை