பரிசில் முதன் முறையாக - புற்று நோய் விழிப்புணர்வு பேரணி!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசில் முதன் முறையாக  புற்று நோய் விழிப்புணர்வு பேரணி!!

புற்றுநோய்க்கு ஆதரவான ஒரு பேரணி நிகழ்வு ஒன்றை பரிசில் நிகழ்த்த பல்வேறு அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளனர். 
 
வரும் ஏப்ரல் 13 ஆம் திகதி இந்த பேரணி Place de la République இல் இடம்பெற உள்ளது. La Ligue Contre le Cancer, l’Institut Curie, l'INCa, l’AP-HP ஆகிய நான்கு நிறுவனங்கள் இணைந்து இந்த புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை நிகழ்த்த உள்ளனர். புற்றுநோய் தொடர்பாக மக்களிடத்தில் இருக்கும் புரிதல் குறித்த சிந்தனையை மாற்ற இந்த பேரணி பெரும் உந்துசக்தியாக இருக்கும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளனர். 
 
தவிர, <<cancer pride>> எனும் இந்த பேரணி பிரெஞ்சு தலைநகரில் இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும். புற்றுநோய்க்கு எதிராக போராடுவோர் அனைவருக்குமான ஒரு நிகழ்வாக இது இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை