ஒருவாரமாக தேடப்பட்டுவந்த காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஒருவாரமாக தேடப்பட்டுவந்த காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு!!

Gard மாவட்டத்தின் Alès நகரைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த ஒருவாரமாக காணாமல் போயிருந்த நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
சக காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த சடலத்தை மீட்டுள்ளார். கடந்த வார திங்கட்கிழமையில் இருந்து தனது கணவரைக் காணவில்லை என 49 வயதுடைய காவல்துறை அதிகாரியின் மனைவி புகார் அளித்திருந்தார்.  <<La Calmette நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து திங்கட்கிழமை இவர் காணாமல் போயுள்ளார்>> என ஜோந்தாமினரிடம் புகார் அளித்திருந்தார். 
 
அதைத் தொடர்ந்து, அவரை தேடும் பணியில் 100 ஜோந்தாமினர்கள் மோப்ப நாயுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினரின் மனைவியும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
 
ஆனால் இறுதியாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

மூலக்கதை