பிரித்தானிய பெண்ணிற்கு டுபாயில் சிறைதண்டனை!
டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த 55 வயதான லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக டுபாய் சென்றுள்ளார். இதன்போது அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த ஒளிப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்ட போது, ஷ்ரவேஷ் பகிர்ந்த கருத்துக்கள் குறித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷ்ரவேஷிற்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆனது. இதன்போது ஒரு எட்டு மாத காலம் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஷ்ரவேஷ் இருந்துள்ளார்.
எனினும் விவாகரத்தானதும் பிரித்தானியாவிற்கு தனது மகளுடன் திரும்பியுள்ளார்.
இந்தநிலையில் தனது கணவர் மறுமணம் செய்துகொண்ட ஒளிப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவுடன் ஷ்ரவேஷ், ‘நீ மண்ணில் புதைந்து போக வேண்டும். இந்த குதிரைக்காகதான் என்னை விட்டுவிட்டாயா’ என பதிவிட்டுள்ளார்.
டுபாயின் சைபர் குற்றவியல் சட்டப்படி சமூக வலைதளங்களில் மரியாதைக் குறைவான கருத்துக்களை பதிவிட்டால் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும் என்பது குறிப்பிடப்படுகின்றது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
