கர்ப்பிணி மனைவி முன்னே கணவருக்கு நடந்த கொடுமை!

PARIS TAMIL  PARIS TAMIL
கர்ப்பிணி மனைவி முன்னே கணவருக்கு நடந்த கொடுமை!

பிரித்தானியாவில் கர்ப்பிணி மனைவி முன்னே கணவரை கொடூரமாக தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர்.
 
Birmingham நகரில் Shabaz Shakat என்ற நபர் தனது வீட்டுக்கு வெளியே 5 பேர் கொண்ட மர்மநபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
 
உலோகங்கள் கொண்டு இவரை தாக்கியதால் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு நிலைகுலைந்து போயுள்ளார்.
 
கணவரை தாக்கிய கும்பல், 6 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை அழைத்து, உனது கணவரை தாக்குவதை பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு ஆளான கணவர் ரத்த வெள்ளத்தில் தெருவில் விழுந்து கிடந்ததை பார்த்த கர்ப்பணி மனைவியின் கரு கலைந்துபோனது.
 
தாக்குதலுக்கு ஆளான Shabaz Shakat, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது அழகான மனைவியை அவளது குழந்தையை இழந்துவிட்டாள். இது எனக்கு முதல் குழந்தை, கடந்த ஜனவரி மாதம் தான் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது.
 
அவர்கள் எனது வீட்டையும் தாக்க முயற்சித்தார்கள், அவர்களிடம் இருந்து தப்பித்து எனது மனைவியை காப்பாற்ற முயற்சித்தேன். அவர்கள் தாக்கியதில் எனது விலா எழும்புகள் உடைந்துவிட்டது. நல்லவேளை நான் இப்போது உயிருடன் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இருந்தால் சாட்சி அளிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை