தனது திருமணத்துக்காக மணிக்கு 213 கி.மீ வேகத்தில் பயணித்த இளைஞன்! - கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
தனது திருமணத்துக்காக மணிக்கு 213 கி.மீ வேகத்தில் பயணித்த இளைஞன்!  கைது!!

நேற்று சனிக்கிழமை 21 வயதுடைய இளைஞன் ஒருவன் அதிவேகமாக பயணித்த காரணத்தினால் ஜோந்தாமினர்களால் கைது செய்யப்பட்டுள்ளான். 
 
Isère இன், Saint-Quentin-Fallavier நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். லியோனின் இருந்து Grenoble நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த இளைஞனுக்கு நேற்று மாலை திருணத்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்துக்கான நேரம் போதவில்லை என்பதால் மணிக்கு 213 கி.மீ வேகத்தில் A41 சாலையில் பயணித்துள்ளான். ஆனால் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோந்தாமினர் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். 
 
மணிக்கு 110 கி.மீ வேகம் மாத்திரமே பயணிக்கக்கூடிய வீதியில் மிக ஆபத்தான பயணம் மேற்கொண்டதால், ஜோந்தாமினர் குறித்த நபரின் காரணத்தை ஏற்கவில்லை. சாரதி அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்ததோடு, மேலதிக விசாரணைகளுக்காக காவல்நிலையத்தில் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளான். திருமணம் இரத்துச் செய்யப்பட்டது.

மூலக்கதை