10 மில்லியன் டொலரை கையால் தொட்டுப் பார்க்க செல்வந்தர் செய்த செயல்!

PARIS TAMIL  PARIS TAMIL
10 மில்லியன் டொலரை கையால் தொட்டுப் பார்க்க செல்வந்தர் செய்த செயல்!

 10 மில்லியன் டாலர் ரொக்கத்தைக் கையால் தொட்டுப் பார்க்க வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளார் ஆப்பிரிக்கச் செலவந்தர் Aliko Dangote.

 
வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் வெறும் எண்களாக இல்லாமல், அதில் உண்மையாகவே பணம் இருக்கிறதா என்பதை அறிய விரும்பினார் அவர். நைஜீரியாவைச் சேர்ந்த அவரது செல்வத்தின் மொத்த மதிப்பு 10.6 பில்லியன் டாலர்.
 
ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஆகப் பெரிய செல்வந்தரும் அவரே.
 
பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வீட்டில் வைத்திருந்ததாக அவர் கூறினார். உண்மையாகவே பணம் இருப்பதைக் கண்டு திருப்தியடைந்த பின் திரும்ப அதை வங்கிக் கணக்கில் சேர்த்தார்.
 
உற்பத்தித் துறையில் இருக்கும் அலிக்கோ டாங்கேட்டே (Aliko Dangote), விவசாயத்திலும், புதிய தொழில்நுட்பத்திலும் ஆப்பிரிக்காவின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாய்க் கூறினார். நிர்வாகப் பிரச்சினைகள் தொடர்ந்து நிறுவனங்களுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட அவர் கூறினார்.
 

மூலக்கதை