பிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள்; ஆனால், பிரதமர் மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையுமே பரிசாக வழங்குகிறார். இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது என்று பேசினார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆதித்யநாத்தின் பேச்சு அடங்கிய விடியோவை அளிக்குமாறு காசியாபாத் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அனுப்பப்பட்ட விடியோவை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, தனது பேச்சு குறித்து விளக்கமளித்து யோகி ஆதித்யநாத் கடிதம் அனுப்பினார். எனினும், அந்த விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், எதிர்காலத்தில் யோகி ஆதித்யநாத் இதுபோன்ற பேசக் கூடாது. வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில் அவரது பேச்சுக்காக வேறு நடவடிக்கை எதையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
