கோஹ்லிக்கு அதிர்ச்சி கொடுத்த ரசல்! வெற்றியை தட்டிப் பறித்த கொல்கத்தா

PARIS TAMIL  PARIS TAMIL
கோஹ்லிக்கு அதிர்ச்சி கொடுத்த ரசல்! வெற்றியை தட்டிப் பறித்த கொல்கத்தா

 

பெங்களூருவில் இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரில் ரசலின் அதிரடியால் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியது.
 
ஐ.பி.எல் தொடரின் 17 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
 
நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
 
இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேல், விராட் கோலி ஆகியோர் இறங்கி தொடக்கம் முதல் இருவரும் அடித்து ஆடினர்.
 
அணியின் எண்ணிக்கை 64 ஆக இருக்கும்போது பார்திவ் படேல் 25 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அவரையடுத்து ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்கினார்.
 
ஆரம்பம் முதலே விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஜோடி அதிரடி காட்டியது. கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். 
 
சிறப்பாக விளையாடிய விராட் கோலி 49 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரியுடன் 84 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ் 31 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 63 ஓட்டத்துடன்  வெளியேறினார்.
 
இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்துள்ளது. ஸ்டோனிஸ் 13 பந்தில் 28 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
இதனையடுத்து 206 ஓட்டங்கள் பெற்றால்  வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லின் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர்.
 
சுனில் நரைன் 10 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் லயனுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்து ஆடினர். 33 ஓட்டங்கள் எடுத்து உத்தப்பாவும் 43 ஓட்டங்கள் எடுத்து லின்னும் வெளியேறினர். அதையடுத்து ரானா அதிரடியாக விளையாடி 37 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் 17 ஓட்டத்துடன் வெளியேறினார். 
 
இந்நிலையில் ரசலின் அதிரடியால் 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ரசல் 13 பந்துகளில் 7 சிக்சர்கள், 1 பவுண்டரி அடங்கலாக 48 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டமிழக்காமல் இருந்தார். 

 

மூலக்கதை