முதலாவது செயற்கை கருவூட்டல் சிறுத்தைக்குட்டியை கடித்துக் கொன்ற தாய் சிறுத்தை!
செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த உலகின் முதலாவது சிறுத்தைக்குட்டியை அதன் தாய் சிறுத்தை கடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்குறித்த சம்பவமானது பிரேசிலின் சாவோ போலோ நகரில் உள்ள ஜுன்டியாய் பகுதியில் உள்ள வரும் வனவிலங்கு ஆராய்ச்சிக் கூடத்தில், செயற்கை கருவூட்டலின் மூலம் உலகின் முதல் சிறுத்தைக் குட்டி பிறந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த சிறுத்தைக் குட்டியை அதன் தாய் சிறுத்தை இரண்டே நாட்களில் கடித்துக் கொன்றுள்ளது.
பியாங்கா எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுத்தைக்கு செயற்கை கருவூட்டல் மூலம் மட்டா சிலியார் எனும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் செயற்கை முறையில் கருவூட்டல் முயற்சியை மேற்கொண்டனர்.
சிறுத்தை இனங்கள் அழிந்து வருவதன் காரணமாக, இந்த புதிய ஆராய்ச்சியில், ஈடுபட்ட அந்த மட்டா சிலியார் குழுவுக்கு, சிறுத்தைக் குட்டி பிறந்தது வெற்றியைத் தந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக தனது குட்டியை பிறந்து இரண்டே நாட்களில், அதன் தாய் சிறுத்தையான பியாங்காவே கடித்துக் கொன்ற சம்பவம் அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், எதிர்காலத்தில், சிறுத்தை இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றும் ஆராய்ச்சி வெற்றியடைந்ததால், அந்த குழுவினர் மகிழ்ச்சியுடனே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தாய் சிறுத்தையின் இந்த நடவடிக்கை குறித்தும் ஆராய்ந்து வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நேராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதையும் ஆலோசித்து வருவதாக அக்குழுவின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
