சத்திரசிகிச்சை அறையில் ஆபாச படம்: ரகசிய கேமராவில் சிக்கிய 1800 பெண்களின் வீடியோ

PARIS TAMIL  PARIS TAMIL
சத்திரசிகிச்சை அறையில் ஆபாச படம்: ரகசிய கேமராவில் சிக்கிய 1800 பெண்களின் வீடியோ

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றி சிகிச்சை வந்த 1800 பெண்களை ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படமெடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஷார்ப் கிராஸ்மொண்ட் என்ற மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில், பிரசவம், கருத்தடை, கருத்தரிப்பு, கருச்சிதைவு உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. 
 
அப்படி கருத்தரிப்பு, பிரசவம், அறுவை சிகிச்சை செய்யும் பெண்கள், உறுப்புகள் தொடர்பான சிகிச்சை பெறும் பெண்கள், கருத்தடைகள், கருச்சிதைவுகள் ஆகிய சிகிச்சை பெற்ற 1800 பெண்களை அவர்களுக்கே தெரியாமல் ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 
 
இதுவரை அமெரிக்க நீதிமன்றத்தில் 81 பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதற்கு மருத்துவமனை தரப்பு விளக்கமும் அளித்துள்ளது. அதாவது, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை கண்காணிக்கவே இந்த கேமராக்கள் மற்றபடி ஆபாச வீடியோக்கள் ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை