பணம் வாங்காமல் மாயாவதி சீட் கொடுக்க மாட்டார்: மேனகா காந்தி கடும் விமர்சனம்

PARIS TAMIL  PARIS TAMIL
பணம் வாங்காமல் மாயாவதி சீட் கொடுக்க மாட்டார்: மேனகா காந்தி கடும் விமர்சனம்

பணம் வாங்காமல் மாயாவதி யாருக்கும் தேர்தலில் போட்டியிட சீட் தர மாட்டார் என்றும், அவரிடம் விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  உத்தர பிரதேச மாநிலத்தில் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் மேனகா காந்தி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது- பணத்தை வாங்காமல் மாயாவதி எந்த காரியத்தையும் செய்ய மாட்டார். அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களிடமே பணத்தை வாங்காமல் விட மாட்டார். அவர் எப்படி நாட்டு மக்களை சும்மா விடுவார்?.  பணத்தை கொடுக்காமல் மாயாவதியிடம் கட்சியினர் எவரும் சீட்டு வாங்க முடியாது. அவர் யாருக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்” இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை