டெல்லிக்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே!

PARIS TAMIL  PARIS TAMIL
டெல்லிக்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
 
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஐந்தாவது போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஜெய்பூரில் ஆரம்பமானது.
 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை குவித்தது.
 
148 ஓட்டம் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வோட்சன் மற்றும் ராயுடு களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர 2 ஆவாது ஓவரின் நான்காவது பந்தில் சென்னை அணியின் முதலாவது விக்கெட் தகர்க்கப்பட்டது. 
 
அதன்படி ராயுடு 5 ஓட்டத்துடன் இஷான் சர்மாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 2 ஆவது விக்கெட்டுக்காக ரய்னாவும், வோட்சனும் ஜோடி சேர்ந்தாடி அதிரடி காட்டினார். இதனால் சென்னை அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.
 
முதல் 5 ஓவர்களில்  சென்னை அணி ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் 50 ஓட்டங்களை கடக்க 7 ஓவரை எதிர்கொண்ட வேட்சன் அந்த ஓவரின் 2,4 ஆவது பந்தில் இரண்டு ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார். எனினும் அவர் அடுத்த பந்தில் ஸ்டம்ப் முறையில் 44 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (73 -2). 
 
இதேவேளை வேட்சனுக்கும் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களான இஷான் சர்மா மற்றும் ரபடாவுக்குமிடையில் மைதானத்தில் முறுகல் நிலையே காணப்பட்டது. இருந்தபோதும் நடுவர் முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
 
ஒரு கட்டத்தில் சென்னை அணி 10 ஓவர்களின் முடிவில் 97 ஓட்டங்களை பெற்றிருந்தது. ரய்னா 30 ஓட்டத்துடனும், யாதவ் 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். எனினும் 10 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் ரய்னா 30 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து சென்றார். 
 
இதனால் சென்னை அணியின் மூன்றாவது விக்கெட் 98 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட தோனி ஆடுகளம் நுழைந்து, தான் எதிர்கொண்ட முதல் பந்தையே நான்கு ஓட்டமாக மாற்ற சென்னை அணி 100 ஓட்டங்களை கடந்தது.
 
ஒரு கட்டத்தில் சென்னை அணி 15 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 120 ஓட்டங்களை பெற்றது. தோனி 12 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 22 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வர, வெற்றிக்கு 28 பந்துகளில் 30 ஓட்டம் தேவை என்ற நிலையில் இருந்தது.
 
இறுதியாக சென்னை அணி 19.4 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் டெல்லி அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் தோனி 32 ஓட்டத்துடனும், பிராவோ 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
 
பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்டையும், இஷான் சர்மா, ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

மூலக்கதை