கார்டூனிஸ்ட்டை குறிவைத்து ஜிகாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 5 பேர் காயம்

NEWSONEWS  NEWSONEWS
கார்டூனிஸ்ட்டை குறிவைத்து ஜிகாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி, 5 பேர் காயம்

டென்மார்க் நாட்டில் சர்ச்சைக்குரிய சுவிடன் கார்டூனிஸ்ட் கலந்து கொண்ட பொது விவாத நிகழ்ச்சியினை குறிவைத்து ஜிகாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகிய நிலையில், சுவிடன் கார்டூனிஸ்ட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

இதுபற்றி சுவிடன் கார்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸ் கூறுகையில், இந்த சம்பவங்களால் நான் அதிர்ச்சி அடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து சிலமணி நேரங்களில் மற்றொரு பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இரண்டு பொலிசார் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஜிகாதிகள் கோபன்ஹேகன் நகரிலே தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடபட்டுள்ளதோடு, பொலிசார் அவர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

மேலும், பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்குதலுக்கும் தற்போதைய டென்மார்க் தாக்தலுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மூலக்கதை