நடிகை த்ரிஷா யுனிசெஃபின் தூதராக நியமனம்
நடிகை த்ரிஷா ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃபின் பிரபல தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை த்ரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் கேரள அரசும் யுனிசெஃப் நிறுவனமும் இணைந்து தயாரித்த, குழந்தைகளுக்கு தட்டம்மை ஊசி போட வலியுறுத்தும் விளம்பரத்தில் த்ரிஷா தோன்றி நடித்தார்.
தற்போது விலங்குகள் நலன், குழந்தைகள் கல்வி போன்றவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். இதனைத் தொடர்ந்து த்ரிஷாவின் சமூக ஈடுபாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில் 'யுனிசெஃபின் பிரபல தூதர்' என்ற பதவியை அவருக்கு வழங்கியுள்ளனர். த்ரிஷாவை யுனிசெஃப் தூதராக அறிவிக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற த்ரிஷா பேசுகையில், "இது எனக்குப் பெரிய கவுரவம். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்புக்காக தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன்.
பெண் குழந்தைகள் 18 வயது வரை கட்டாயம் கல்வி பயின்றால் குழந்தை திருமண முறையை ஒழித்துவிடலாம்," என்றார். தென்னிந்திய சினிமாவிலிருந்து ஒரு நடிகை யுனிசெஃப் அமைப்பின் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
