எங்கள் சில்லரை கூட உலக அழகியாகிவிட்டது; காங்கிரஸ் ...
பாஜக பணமதிப்பிழப்பு விவகாரத்தை கேலி செய்யும் வகையில் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் பெயரை குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், தனது டுவிட்டர் பக்கத்தில் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றத்தை வைத்து பாஜகவின் பணமதிப்பிழப்பு குறித்து கேலியாக விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பணமதிப்பிழப்பு செய்ய நன் நாணயம் என்ன தவறு செய்தது. ஆனால் தற்போது இந்திய சில்லரை உலக அரங்கில் ஆதிக்கம் பெற்றதை பாஜக உணர்ந்திருக்கும்.
நம் சில்லர் கூட உலக அழகி ஆகிவிட்டார் என பதிவிட்டுள்ளார். மனுஷி சில்லர் பெயரை இந்தியாவின் சில்லரையுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு பெருமை சேர்த்த ஒரு பெண்ணின் சாதனையை சசி தரூர் சிறுமைப்படுத்தி விட்டார். அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சசி தரூர், தான் தவறான நோக்கத்தில் எதையும் செய்யவில்லை என்றும், நகைச்சுவைக்காக மட்டுமே கூறினேன்.
மனுஷி சில்லர் பற்றி தவறான நோக்கத்தில் எதையும் சொல்லவில்லை.
அனைவரும் ‘சில்’லாக இருங்கள் என டுவீட் செய்துள்ளார். இவரது இரண்டாவது டுவீட் முதல் பதிவுக்கு எழுந்த கண்டனங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாகவும் மன்னிப்பு கோரூம் விதமாக அமைந்துள்ளது.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
