ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ஆந்திர பெண்; ...
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற 31வயது பெண்ணை பாதுகாலவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி கிடையாது. குறிப்பாக 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது.
இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் ஐயப்பன் கோயிலுக்கு வந்துள்ளார்.
பம்பை நதி அருகே பெண்கள் நுழையாமல் தடுப்பதற்கு காவலர்கள் பலத்த கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அந்த பெண் அதை மீறி வந்துள்ளார்.
பதினெட்டாம்படி அருகே கோயில் பாதுகாவலர்கள் அவரை தடுத்தி நிறுத்தினர். அவரது அடையாள அட்டையை சரிபார்த்துள்ளனர்.
அந்த பெண்ணுக்கு 31வயது என்பது அதன்மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவலர்கள் அந்த பெண்ணை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் அங்கிருந்து திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த பெண் எப்படி பம்பை நதி அருகே சோதனையில் ஈடுபடும் காவலர்களை மீறி கோயில் வரை வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
