உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த பெண் தேர்வு: 17 ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த பெண் தேர்வு: 17 ...

2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.


    சீனாவின் சான்யா நகரில் 2017-ஆம் ஆண்டிற்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் கலந்துகொண்டு உலக அழகி பட்டத்தை வென்றார்.

மனுஷி சில்லார் ஏற்கனவே மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்தியாவில் இருந்து ஏற்கனவே ரெய்டா பரியா, ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி, பிரியங்க சோப்ரா என்று இந்தியாவில் இதுவரை ஐந்து பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.   கடைசியாக பிரியங்கா சோப்ரா 2000-ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப்பெண் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை