முடிந்தது ஐ.எஸ்.ஐ ஆதிக்கம்: ஈராக்கின் கடைசி ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
முடிந்தது ஐ.எஸ்.ஐ ஆதிக்கம்: ஈராக்கின் கடைசி ...

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஐஎஸ் இயக்கத்தினர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த நிலையில் அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் ஒத்துழைப்பால் ஐஎஸ் இயக்கத்தினர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வந்தன


 

இந்த நிலையில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தனிநாடு நடத்தி வந்த ஐஎஸ் ஆதிக்கத்தில் இருந்த ராவா நகரமும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்மூலம் ஈராக் அரசின் கட்டுப்பாட்டிற்குள் தற்போது முழு ஈராக் பகுதிகளும் உள்ளன.

மேலும் ராவா நகரில் உள்ள அரசு அலுவலகங்கள், கட்டடங்களில் ஐஎஸ் கொடிகள் இறக்கப்பட்டு அதற்கு பதிலாக ஈராக் கொடியைப் பறக்கவிட்டதாக அந்நாட்டு ராணுவம்  உறுதி செய்துள்ளது.

இந்தச் செய்தியை ஏ. எஃப். பி.

செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை