ரஜினியுடன் மோத தயாராகும் அனுஷ்கா
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2. 0. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
அக்ஷய் குமார் நடித்துள்ள பத்மன் படம் வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ரஜினியின் 2. 0 தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி, ரஜினியின் 2. 0 ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் ஜி. அசோக் இயக்கி, அனுஷ்கா நடிப்பில் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழில் ஆகிய மொழிகளில் உருவான பாக்மதி படம் வரும் ஜனவரி 26ம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரஜினியின் 2. 0 படம் ஜனவரி 25ம் தேதி வெளியானால், பாக்மதி கடும் போட்டியை சமாளிக்க வேண்டி இருக்கும். தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
