சோனியா எடுத்த அதிரடி முடிவு: காங்கிரஸ் ...
அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி விரைவில் தலைவராக உள்ளதாக அந்த கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் திங்கள் கிழமை கூட உள்ள அந்த கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள சோனியா காந்தி அவ்வப்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
நீண்ட காலமாக தலைமை பதவிக்கு தன்னை தயார்ப்படுத்தி வரும் ராகுல் காந்தி விரைவில் தலைவர் பொறுப்பை ஏற்பார் என பல நேரங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் ராஜீவ் குடும்பத்துக்கு நெருக்கமானவருமான சச்சின் பைலட் கடந்த மாதம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ராகுல் காந்தி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார் என கூறியிருந்தார். ராகுல் காந்தியின் தலைமை பொறுப்பு பதவியேற்பு தீபாவளிக்கு பின்னர் இருக்கும் என அப்போதே பேசப்பட்டது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வரும் சோனியா காந்தி காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமே கட்சியின் தலைமையை ராகுல் காந்தியிடம் ஒப்படைப்பதுதான் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
