மூதாட்டியை கொல்ல முயன்ற பூனை; கைது செய்ய ...
ஜப்பானில் மூதாட்டி ஒருவரை பூனை கொலை செய்ய முயன்றதையடுத்து தலைமறைவான பூனையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஜப்பான் டோக்கியோ நகரில் மயாகோ மாட்சுமோட்டா என்ற 80 வயது நிரம்பிய மூதாட்டி தனது மகளுடன் வசித்து வருகிறார். மகள் வெளியே சென்று வீடு திரும்பியபோது மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடனே மகள் தனது தாயை மருத்துவமனையில் அனுமதித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த பெண் வீட்டை விட்டு வெளியே சென்றபோது கதவை வெளியே பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
காவல்துறையினர் நடத்திய சோதனையில் புதிய மனிதர்களின் கைரேகை எதுவும் வீட்டில் பதியவில்லை. மருத்துவமனையில் நினைவு திரும்பிய மூதாட்டி பூனை என்று கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வீட்டில் இருந்த பூனை மீது சந்தேகப்பட்டுள்ளனர்.
மேலும் மூதாட்டியின் முகத்தில் இருந்த கீறல்கள் அனைத்தும் பூனையின் நக கீறல்கள். சம்பவத்திற்கு பிறகு அந்த பூனை வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டது. இதனால் காவல்துறையினர் தற்போது அந்த பூனையை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்த மூதாட்டிக்கு நினைவு திரும்பிய பின்னரே கொலை முயற்சி சம்பவம் குறித்து தெளிவான விளக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.
.



காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
