டெல்லி காற்று மாசுக்கு குரல் கொடுத்த கோலி
டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டுக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுவாசிக்கவே முடியாத மக்கள் வீட்டிலே முடங்கி உள்ளனர். காற்று மாசுபடுவதற்கு போக்குவரத்து அதிகரிப்பு ஒரு காரணியாக உள்ளதால், மக்கள் தனியார் போக்குவரத்தை விடுத்து பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுகுறித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், டெல்லியின் நிலை நமக்கு நிச்சயம் தெரியும். நிறையப்பேர் இது ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விவாதித்து மட்டும் வருகிறார்கள்.
மாசுபாட்டிற்கு எதிரான இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால் நாம் ஒன்று சேர்ந்து விளையாடினால் மட்டுமே முடியும். டெல்லியில் நிலவி வரும் மாசுபாட்டை குறைப்பது நமது கடமை. மக்கள் இந்த நேரத்தில் பொது போக்குவரத்தை உபயோகப்படுத்த வேண்டும்.
பேருந்து மெட்ரோ, ஓலா ஷேர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
நமது சிறிய முயற்சி கூட பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
