400 டாலர்களுக்கு அடிமைகளாக விற்கப்படும் அகதிகள்: ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
400 டாலர்களுக்கு அடிமைகளாக விற்கப்படும் அகதிகள்: ...

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்கின்றனர்.  


    கடந்த 2011 ஆம் ஆண்டு லிபியாவில் முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியது.
  போர் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சென்றனர்.
  இது தவிர்த்து உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் இடம்பெயர்கின்றனர்.
  ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் அகதிகள் லிபியா வழியாக செல்கின்றனர்.

லிபியாவில் உள்ள கொள்ளையர்கள் மக்களை சிறை பிடித்து 400-600 டாலருக்கு அடிமைகளாக விற்கின்றனர்.
  இது தொடர்பான வீடியொ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

.

மூலக்கதை