விவாகரத்து கேட்டு செல்போன் டவர் மீது ஏறி டாக்டர் ...
மனைவி தன்னை துன்புறுத்துவதாகவும், விவாகரத்து வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து டாக்டர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜகித்யால் மாவட்டத்தை சேர்ந்த அஜய்குமார் ராவ் என்பவர் மருத்துவராக உள்ளார். இவருக்கும் இவரது மனைவி லஷ்யாவும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த மருத்துவர் உயரமான செல்போன் டவரின் மீது ஏறி விவாகரத்து கோரிக்கை தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் டவர் ஏறிய மருத்துவர் அஜய்குமார் தான் எழுதிய கடிதத்தை கீழே தூக்கிப்போட்டு கீழே குதித்துவிடுவேன் என் மிரட்டியுள்ளார்.
அவர் தூக்கி போட்ட கடிதத்தில், என் மனைவி என்னை துன்புறுத்துகிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னை வீட்டிலிருந்து வெளியில் துரத்துவிட்டார்.
எனக்கு உடனடியாக என் மனைவியுடன் விவாகரத்து வேண்டும். இல்லையென்றால் கீழே குதித்து விடுவேன் என எழுதப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:- அஜய்குமாருக்கும், லஷ்யாவுக்கும் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக லஷ்யா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் உள்ளூர் காவல்துறையினர் அவரை அடிக்கடி அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
இது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர். இதையடுத்து டவரிலிருந்து கீழே இறங்கிய அஜய்குமாரும் அவரது மனைவியும் கவுன்சிலிங்குக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
.



பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
