முன்ஜென்மத்தில் நான்தான் உன் கணவன்; ஐடி பெண்ணை ...
சைலால் ஜேதியா என்ற போலி சாமியார் முன்ஜென்மத்தில் நான்தான் உன் கணவர் என கூறி ஐடி பெண்ணை ஏமாற்றியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மிகவும் புகழ்பெற்ற சாமியாராக திகழ்ந்து வந்தார் சைலால் ஜேதியா. இவர் தன்னை சந்திக்க வரும் பக்தர்களுக்கு முன் ஜென்மம் குறித்து விளக்குவது, நோய்களை குணமாக்கும் வழிகளை சொல்வது என பல விஷயங்கள் செய்து வந்துள்ளார்.
இதன்மூலம் அவர் செய்யும் சேவைகளுக்கு 3 லட்சத்திற்கு குறையாமல் பணம் வசூலித்து வந்துள்ளார். இவரிடம் ஆசி பெற வந்த ஐடி பெண் ஒருவரை, முன்ஜென்மத்தில் நான்தான் உன் கணவர். நாம் ஒன்றாக பல காலம் வாழ்ந்தோம் என்று பலவிதமாக கதை கூறியுள்ளார்.
இதையும் அந்த பெண் அப்படியே நம்பியுள்ளார். இதை பயன்படுத்தி சாமியார் அந்த பெண்ணை பலமுறை வன்புணர்வு செய்துள்ளார். அதோடு அந்த பெண்ணின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
அந்த பெண்ணின் தந்தையை குணப்படுத்துவதாக கூறி பணம் பறித்துள்ளார். தந்தை உடல்நிலையில் மாற்றம் இல்லாமல் இருந்ததையடுத்து அந்த பெண் சாமியாரிடம் செல்வதை குறைத்துள்ளார். இந்நிலையில் சாமியார் அந்த பெண்ணிற்கு சிடி ஒன்றை அனுப்பி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.
பின்னர் அந்த பெண் தானே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண் அளித்த புகாரின் பேரில் இரண்டு நாட்களுக்கு சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
