கோட்சேவிற்கு கோவில் கட்டி பூஜை: இந்துமகா சபை ...
தேசத்தந்தை எனப்போற்றப்படும் மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு இந்துமகா சபையினர் கோவில் கட்டி பூஜை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோட்சே, காந்தியைக் கொன்ற குற்றத்திற்காக 1949-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டார். இந்த நாளை இந்துமகா சபையினர் தியாக தினமாக அனுசரித்து அவரை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள அகில பாரத இந்துமகா சபை அலுவலகத்தில் கோட்சேவிற்கு சிலை எழுப்பி, மாலை அணிவித்து, பூஜை செய்துள்ளனர். இந்து மகாசபையினரின் இந்த செயல் அங்கு சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் மாவட்ட நிர்வாகம் கோட்சேவிற்கு கோயில் கட்ட அனுமதி தரமறுத்த நிலையில், இந்து மகாசபையினர் தங்களது அலுவலகத்தின் உள்ளேயே சிலை எழுப்பி நேற்று அவரது நினைவு தினத்தை அனுசரித்துள்ளனர்.
கோட்சே சிலை எழுப்பி, பூஜை செய்தவர்களை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
