3 கண் உடைய கொசுவை பற்றி தெரியுமா??

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
3 கண் உடைய கொசுவை பற்றி தெரியுமா??

முள்ளை முள்ளாள் எடுப்பது சாத்தியம் எனில் கொசுவையும் கொசுவை வைத்துதான் அழிக்க முடியும் என அமெரிக்க விஞ்ஞானிகள் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.


    ஆம், அமெரிக்க விஞ்ஞானிகள் மரபணு மாற்றத்தின் மூலம் மூன்று கண்களுடன் இறக்கை இல்லாத கொசுவை உருவாக்கியுள்ளனர்.
  கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பறக்க முடியாத, 3 கண்கள் கொண்ட கொசுவை உருவாக்கியுள்ளனர்.  
  இந்த கொசுக்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளன. இதற்கு சில மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை கொண்டு மரபணுக்களில் மாற்றம் செய்துள்ளனர்.  
  இந்த மாதிரி கொசுக்களை உற்பத்தி செய்தால் அவற்றின் மூலம் பெருகும் கொசுக்களும் குறைபாடுடன் பிறக்குமாம்.

இதனால் நோய்களை பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கை குறையுமாம்.
  இதே போன்று அடுத்து ஏடிஸ் கொசுக்களிலும் இந்த மரபணு மாற்றத்தை செய்யும் முயற்சியில் ஈடுபடவுள்ளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

.

மூலக்கதை