துக்ளக் ஆட்சி நடத்தும் மோடி: யஷ்வந்த் சின்ஹா ...
பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ரூ. 3. 75 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை குற்றம் சாட்டியுள்ளதோடு மோடி 700 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த துக்ளக்கின் ஆட்சியை பின்பற்றுகிறார் என விமர்சித்துள்ளார்.
கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவத்துடன் பணமதிப்பிழப்பை ஒப்பிட்டுள்ளார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.
முகமது பின் துக்ளக் 700 ஆண்டுகளுக்கு முன்னரே புதிய கரன்சியை அறிமுகப்படுத்தி பழைய கரன்சிகளுக்கு முடிவு கட்டினார். எனவே பணமதிப்பிழப்பு என்பது 700 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றது.
இதைதான் தற்போது மோடி செய்துள்ளார்.
பணமதிப்பிழப்புக்கு பிறகு அவர் பேசிய நீண்ட உரையில் 74 முதல் 75 முறை கருப்பு பணம் என்பதை குறிப்பிட்டார். பணமதிப்பிழப்பால் நாட்டுக்கு ரூ. 3. 75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் ஒற்றை காலில் நின்று கொண்டிருக்கிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
