இளம்பெண் ஊழியருக்கு செல்பி மூலம் இன்ப அதிர்ச்சி ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
இளம்பெண் ஊழியருக்கு செல்பி மூலம் இன்ப அதிர்ச்சி ...

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான லிங்க்ட்-இன் செல்பி தனது அலுவலகத்தில் பணிபுரியும் இளம்பெண் ஊழியருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.


 

சமீபத்தில் அயர்லாந்து நாட்டின் லிங்க்ட்-இன் அலுவலகத்திற்கு அவர் சென்றபோது ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஒரு முக்கிய நிகழ்வுக்கு அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் மரியா என்பவர் செல்ல வேண்டியதிருந்தது.

சி. இ. ஓ வரும் நேரத்தில் விடுமுறைக்கு செல்கிறோமே என்று தயங்கிய மரியா, கடைசியில் தனது புகைப்படத்தை டேபிளில் வைத்து விட்டு சி. இ. ஓவை சந்திக்க முடியாமல் போன காரணத்தையும் எழுதி வைத்து சென்றுள்ளார். மரியாவின் இக்கட்டான நிலையை புரிந்து கொண்ட லிங்க்ட்-இன் சி. இ. ஒ, அந்த புகைப்படத்துடன் ஒரு செல்பி எடுத்து அதில், “என் டுப்லிங் பயணத்தில் உங்களைச் சந்திக்க தவறிவிட்டேன்.

சர்வதேச அளவில், உங்களின் திறமையை நிலைநாட்டுங்கள். நீங்கள் ஒரு கேம்- சேஞ்சர்” என்று பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விடுமுறை முடிந்து பணியில் சேர்ந்த மரியாவுக்கு அந்த செல்பி புகைப்படத்தை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

இதுகுறித்து அவர் பதிவு செய்தபோது, 'இந்த டீமில் வேலை செய்வதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இது என்னுடைய ஃபேவரட் செல்ஃபி'' என்று அந்தப் புகைப்படத்தையும் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார் மரியா.

இந்த பதிவிற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

.

மூலக்கதை