150 வருட மரபை மாற்ற போகும் 2018-2019ஆம் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
150 வருட மரபை மாற்ற போகும் 20182019ஆம் ...

150 வருடமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஏப்ரல்-மார்ச் நிதியாண்டு காலம், தற்போது ஜனவரி-டிசம்பர் என மாற்றப்பட உள்ளது.

 
  2018-2019 ஆண்டிற்கான பட்ஜெட் இந்த மாதம் வெளியாகும் என மத்திய அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நிதி ஆண்டு காலத்தை மாற்றியமைக்க அரசு வேலை செய்து வருகிறது.   பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் டிசம்பர் மாதத்திற்கு முன்பே நடைபெற உள்ளது.

இதனால் பட்ஜெட் குறித்து முழு விவரங்கள் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் குறித்து முடிவெடுக்க இரண்டு மாதம் கால தேவை என்பதால் நவம்பர் மாதம் முதல் வாரத்திலே பட்ஜெட் கூட்டத் தொடர் தொங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.   ஆனால் தற்போது அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அண்மையில் நடைபெற்ற ஐஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பொருட்களுக்கான வரி குறைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நிதியாண்டு, தேசிய கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை ஒப்பிடலாமல் மற்றும் எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரைக்காமல் எடுக்கப்பட்ட முடிவு.   இந்தியாவில் நிதியாண்டு காலத்தை ஜனவரி- டிசம்பர் என முதலில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாற்றப்பட்டது.   

.

மூலக்கதை