கடன் நெருக்கடி: இழுத்து மூடப்படும் ஏர்செல் ...
கடன் நெருக்கடி காரணமாக ஏர்செல் நிறுவனம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அனில் அம்பானியில் ஆர்காம் நிறுவனத்துடன் ஏர்செல் நிறுவனம்
இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த இணைப்பு திட்டம் சில காரணங்களால் பின்வாங்கப்பட்டது. இந்நிலையில், 75 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஆர்காம் நிறுவனம் வாய்ஸ் கால் சேவையை நிறுத்த முடிவு செய்தது.
இதனையடுத்து தற்போது, ஏர்செல் நிறுவனம் மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்கனவே போட்டி வலிமை அதிகரித்துள்ளது. புதிய 4ஜி அலைக்கற்றைகளை வாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
அதோடு ஏர்செல் நிறுவனத்திடம் தற்போதைய சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை.
எனவே, வேறுவழியின்றி தனது 8 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை ஒரு நிறுவனத்துக்கும் 40 ஆயிரம் டவர்களை வேறு நிறுவனத்துக்கும் விற்க ஏர்செல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
