வதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா
அனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் அழைக்கின்றனர்.
தன்னைப் பற்றி கிசுகிசு வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் லேசாக ஒரு புன்னகை தவழவிட்டு நகர்ந்துவிடுவார். சமீபகாலமாக அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அவரைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்டால் உடனே எரிந்து விழுகிறாராம். தான் குண்டாகிவிட்டதாக கடந்த ஒரு வருடமாக தகவல்கள் வெளியாகி வருவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் சில அந்தரங்க விஷயங்களும் அவ்வப்போது லீக் ஆவதாக எரிச்சல் அடைந்தார். தன்னைப்பற்றி வதந்தி பரப்புபவர் யார் என்பதை கண்காணித்து வந்தார்.
தனது உதவியாளர் ஒருவர் இந்த செயலில் ஈடுபடுவதாக எண்ணியவர் அவரை அழைத்து கண்டித்ததுடன் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.
இதுபற்றி அனுஷ்கா தரப்பில் விசாரித்தபோது,’அனுஷ்கா எடுத்த இந்த நடவடிக்கைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியதால் உதவியாளரை நீக்கினாரா அல்லது புதிய உதவியாளரை நியமிப்பதற்காக இப்படி செய்தாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது.
ஆனால் விரைவில் புதிய உதவியாளர் ஒருவரை அவர் வேலைக்கு அமர்த்துவார்’ என்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
