‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது
தமிழில் கே. பாலசந்தர்போல் கமலுக்கு தெலுங்கில் ஹிட் படங்களை வழங்கிய இயக்குனர் கே. விஸ்வநாத். கமல், ஜெயப்பிரதா நடித்த சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து படங்களை இயக்கியதுடன் மறைந்த எம்ஜிஆரால் பாராட்டப்பட்ட சங்கராபரணம் படத்தையும் இயக்கியவர்.
சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
2016ம் ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே’ விருது இயக்குனர் கே. விஸ்வநாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே மாதம் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதை ஜனாதிபதி வழங்க இருக்கிறார். விருதுடன் ரூ.
10 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கே. விஸ்வநாத் பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.
இவர் இயக்கிய சங்கராபரணம், சப்தபதி, சுவாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து), சூத்ரதாருளு, சுவர்ணாபிஷேகம் ஆகிய படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளது. தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’, விக்ரம் நடித்த ‘ராஜபாட்டை’ ஆகிய படங்களில் கே. விஸ்வநாத் நடித்திருக்கிறார்.
87வது வயதில் தாதா சாகேப் விருது பெறும் விஸ்வநாத்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
