ஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா?
தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா இயக்கும் படம் ‘மகளிர் மட்டும்’. சூர்யாவை மணந்தபிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்த ஜோதிகா நீண்ட நாட்களுக்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார்.
இதையடுத்து மகளிர் மட்டும் படத்தில் நடிக்கிறார். சூர்யா தயாரிக்கிறார்.
பெண்களை மையமாக வைத்து உருவாகும் இதில் ேஜாதிகாவுடன் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா நடிக்கின்றனர். இதன் ஆடியோ ரிலீஸில் பேசிய ஜோதிகா, ‘ஹீரோக்களை பின்பற்றும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஹீரோயின்களுக்கு ஹீரோக்கள் எந்தளவுக்கு மதிப்பு தருகிறார்களோ அதையே ரசிகர்களும் பின்பற்றுகின்றனர்.
உங்கள் குடும்ப பெண்களுக்கு தரும் மரியாதையை ஹீரோயின்களுக்கும் தாருங்கள். ஹீரோ பின்னால் சுற்றித்திரியும் கதாபாத்திரங்களை வழங்காமல் கவுரவமான பாத்திரங்களை இயக்குனர்கள் வழங்க வேண்டும்.
ஒரு ஹீரோவுக்கு பல ஹீரோயின்களை ஜோடியாக நடிக்க வைக்காதீர்கள். அர்த்தமில்லாமல் ஹீரோக்களை ஹீரோயின்கள் விரட்டி விரட்டி காதலிப்பதுபோல்காட்சி அமைக்காதீர்கள்.
இதை என் கணவரும் தனது படங்களில் பின்பற்றுவார் என்று நம்புகிறேன்’ என்றார். அடுத்து பேசிய சூர்யா,’ ஜோதிகா குறிப்பிட்டதுபோல் என் படங்களில் காட்சிகள் அமைக்க முயல்கிறேன்.
எனது நிறுவனம் தயாரிக்கும் படங்கள் தரமானதாகவும் கருத்துள்ளதாகவும் இருக்கும்’ என்று உறுதி அளித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
