வேடம் விட்டு வேடம் தாவுவதால் அனுஷ்காவுக்கு மாறிய சமந்தா வாய்ப்பு
சமந்தா திருமண சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறார். நாக சைதன்யாவுடன் அக்டோபரில் திருமணம் நடப்பதால் அதற்கான காஸ்டியூம் டிசைன் செய்வது, மெகந்தி, சங்கீத நிகழ்ச்சிகள் வரை மும்முரமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
இதற்கிடையில் ஒப்புக் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். சாவித்ரி வாழ்க்கை படத்தில் முதலில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா திடீரென்று அதிலிருந்து விலகினார்.
ஸ்லிம் தோற்றத்திலிருந்து மாறி வெயிட் போட வேண்டும் என்று இயக்குனர் நாக் அஸ்வின் விதித்த கண்டிஷனே இந்த மாற்றத்துக்கு காரணம். இதனால் அவர் ஏற்கவிருந்த சாவித்ரி பாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு கைமாறியது.
சாவித்ரி வாழ்க்கை படத்தில் தானும் இருக்க வேண்டும் என்று எண்ணிய சமந்தாவுக்கு அப்படத்தில் இடம் பெறும் ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க யோசனை வரவே அதற்கு ஓ. கே சொன்னார்.
கதைப்படி சாவித்ரியும், ஜமுனாவும் போட்டியாளர்கள் என்பதால் அது தன்னை எதிர்மறையாக காட்ட வாய்ப்புள்ளது என்று தயக்கம் எழவே அந்த பாத்திரத்திலிருந்தும் விலகினார்.
அவர் நழுவவிட்ட ஜமுனா கதாபாத்திரத்தில் தற்போது அனுஷ்கா நடிக்க முன்வந்திருக்கிறார். கடைசியாக பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
