‘கத்தி’ ஸ்ருதி, ‘கம்பு’ சமந்தா : சண்டை பயிற்சியில் தீவிரம்
சுந்தர். சி. இயக்கத்தில் உருவாகும் படம் சங்கமித்ரா.
ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கின்றனர். ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
சரித்திர பின்னணியிலான படமாக இது உருவாகிறது. இதற்காக ஸ்ருதிஹாசன் கத்தி சண்டை பயிற்சி பெற வேண்டும் என இயக்குனர் கூறியிருந்தார்.
அதை ஏற்று லண்டன் புறப்பட்டு சென்றார் ஸ்ருதி. அங்கு பிரத்யேகமாக கத்தி சண்டை பயிற்சி பெறுகிறார்.
பட தரப்பில் இதுபற்றி கூறும்போது. சங்கமித்ரா பாத்திரம் ஏற்கிறார் ஸ்ருதி.
கத்தி சண்டை போடுவதில் திறமையான கதாபாத்திரமாக இது சித்தரிக்கப்படுகிறது. இதற்காக ஸ்ருதி கத்தி சண்டை பயிற்சி பெற சம்மதித்தார்.
லண்டனில் உள்ள கத்தி சண்டை சிறப்பு பயிற்சியாளரிடம் பயிற்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அவரிடம் கடந்த சில நாட்களாக தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ருதி.
கத்தி சண்டைக்கான நுணுக்கங்களில் அவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது’ என்றனர். ஸ்ருதி கத்தி சண்டை பயிற்சி வீடியோவும் வெளியானது.
ஸ்ருதியின் இந்த வீடியோ வெளியானவுடன் சமந்தா ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில் சிலம்ப சண்டைக்காக கம்பு பிடித்து சுழற்றி அசர வைக்கிறார்.
நீங்கள் எந்த படத்துக்கு சிலம்ப சண்டை பயிற்சி பெறுகிறீர்கள் என்றால், ‘எந்த படத்துக்காகவும் இல்லை. கலைகள் கற்பது எனக்கு பிடிக்கும்.
இதுவும் ஒரு கலை அதனால் கற்றுக்கொள்கிறேன்’ என்றார். சமந்தா- நாக சைதன்யா திருமணத்தை அக்டோபரில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அதை மாற்றி முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் மாதமே திருமணத்தை நடத்தவும் பேச்சு நடக்கிறது.
இறுதி முடிவு எடுக்கவில்லை.
.



பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
