ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் திரிஷா : நடுக்கத்தில் தாயார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் திரிஷா : நடுக்கத்தில் தாயார்

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த திரிஷா சமீபமாக கதாநாயகிக்கு   முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சோலோவாக அவர்  நடித்த நாயகி கடந்த ஆண்டு திரைக்கு வந்தது.

அந்த வரிசையில் ‘மோகினி’,  ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை-2’ என 3 படங்களில் நடித்து வந்தார்.   இப்படங்களின் படப்பிடிப்பையும் தற்போது திரிஷா  முடித்துவிட்டார். சமீபகாலமாக  திரிஷாவுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை.

அவரது போட்டியாளரான நயன்தாரா  அடுத்தடுத்து வெற்றி படங்கள் தந்து வர்த்தக ரீதியாக முதலிடத்தை பெற்றிருக்கிறார். அவரை மிஞ்சும் வகையில் தனது படங்களின் வர்த்தகம் சூடு பிடிக்க  வேண்டும் என்ற முனைப்போடு திரிஷா உடல்வருத்தம் பார்க்காமல் ஆபத்தான சண்டை காட்சிகளில் நடிக்கிறார்.சமீபத்தில் கயிற்றில் அவர் அந்தரத்தில்  தொங்கிக்கொண்டிருந்த ஆக்‌ஷன் காட்சியை பார்த்த திரிஷாவின் தாயார் உமா  நடுநடுங்கிப்போய்விட்டாராம். ஆபத்தான சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து  நடிக்கும் திரிஷாவுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று அவர் வேண்டிக் கொண்டிருக்கிறாராம்.

அடுத்தடுத்து தனக்கு ஆக்‌ஷன் கதைகளை  அளித்து தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் இப்படங்களின் இயக்குனர்கள்  மற்றும் தொழில்நுட்ப  கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் திரிஷா.

.

மூலக்கதை