பழிவாங்க துடிக்கும் நடிகரின் ஆவி?
இந்தி படங்களில் நடித்திருப்பவர் ஓம் புரி (66). கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் டி. வி.
ஒன்று ஓம்புரி பற்றிய திகில் விஷயத்தை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள ஓம்புரியின் வீட்டுக்கு அருகே அவரது ஆவி நடமாடுவதாக தகவல் பரப்பியதுடன் மர்ம உருவம் ஒன்று அப்பகுதியில் நடமாடுவதுபோன்ற காட்சியும் ஒளிபரப்பியது.
இதுபற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர், ஓம்புரியின் ஆவி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை பழிவாங்க அலைவதாக கூறி திகில் கிளப்பினார். பாதுகாப்பு ஆலோசகருக்கும், ஓம்புரிக்கும் என்ன சம்பந்தம் என்றபோது, ‘உரி தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடைவிதித்து பல நட்சத்திரங்கள் கருத்துதெரிவித்தனர்.
ஆனால் ஓம்புரி பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்தே அவர் மர்மமான முறையில் இறந்தார்.
அவரது சாவுக்கு பாதுகாப்பு ஆலோசகர் தான் காரணம். எனவே அவரை பழிவாங்க ஓம்புரி ஆவி நடமாடுவதாக தெரிவித்தார்.
இந்த ஒளிபரப்பு நடந்து ஒரு சில மாதங்கள் ஆகியிருந்தாலும் தற்போதுதான் இது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
