பழிவாங்க துடிக்கும் நடிகரின் ஆவி?

தமிழ் முரசு  தமிழ் முரசு
பழிவாங்க துடிக்கும் நடிகரின் ஆவி?

இந்தி படங்களில் நடித்திருப்பவர் ஓம் புரி (66). கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் டி. வி.

ஒன்று ஓம்புரி பற்றிய திகில் விஷயத்தை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள ஓம்புரியின் வீட்டுக்கு அருகே அவரது ஆவி நடமாடுவதாக தகவல் பரப்பியதுடன் மர்ம உருவம் ஒன்று அப்பகுதியில் நடமாடுவதுபோன்ற காட்சியும் ஒளிபரப்பியது.இதுபற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர், ஓம்புரியின் ஆவி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை பழிவாங்க அலைவதாக கூறி திகில் கிளப்பினார். பாதுகாப்பு ஆலோசகருக்கும், ஓம்புரிக்கும் என்ன சம்பந்தம் என்றபோது, ‘உரி தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடைவிதித்து பல நட்சத்திரங்கள் கருத்துதெரிவித்தனர்.ஆனால் ஓம்புரி பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்தே அவர் மர்மமான முறையில் இறந்தார்.

அவரது சாவுக்கு பாதுகாப்பு ஆலோசகர் தான் காரணம். எனவே அவரை பழிவாங்க ஓம்புரி ஆவி நடமாடுவதாக தெரிவித்தார்.

இந்த ஒளிபரப்பு நடந்து ஒரு சில மாதங்கள் ஆகியிருந்தாலும் தற்போதுதான் இது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


.

மூலக்கதை