உஷ்ஷ்ஷ்... கப்சிப் தணிக்கை அதிகாரிகளுக்கு இயக்குனர் கண்டிஷன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உஷ்ஷ்ஷ்... கப்சிப் தணிக்கை அதிகாரிகளுக்கு இயக்குனர் கண்டிஷன்

பாகுபலி 2ம் பாகத்தில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்பது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது. தணிக்கைக்காக படம் பார்க்கும் அதிகாரிகள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குகூட படம் ரிலீஸ் ஆகும்வரை சஸ்பென்ஸ் காட்சி பற்றிய முடிவை வெளியில் சொல்லக்கூடாது என இயக்குனர் ராஜமவுலி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதனை அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர். ஒரு சில படங்களின் கதை, கிளைமாக்ஸ், வசனம் போன்றவை தணிக்கை சான்றிதழ் பெற்றதும் பட ரிலீஸுக்கு முன்பே இணைய தளங்களில் லீக் ஆகிறது.இது காட்சி மீதான எதிர்பார்ப்பை குறைத்துவிடுகிறது. பாகுபலி 2ம் பாகத்துக்கு அப்படி நடக்கக் கூடாது என்பதால் அதிகாரிகளிடம் இப்படியொரு கண்டிஷன் போட்டாராம் ராஜமவுலி.

பாகுபலி 2ம் பாகம் படப்பிடிப்பின் இறுதிநாள் பற்றி ராஜமவுலி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். ‘படப்பிடிப்பின் கடைசி நாள்.

அருமையான பயணம். மறக்க முடியாத அனுபவம்.

பிரபாஸ், ராணா.

அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் நடித்துள்ள இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

.

மூலக்கதை