சிறையில் இருக்கும் சசிகலாவை பாடாய் படுத்தும் தேர்தல் ஆணையம்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
சிறையில் இருக்கும் சசிகலாவை பாடாய் படுத்தும் தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக சமூக வலைத்தளங்ளில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்து பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இச்சூழலில் அத்தொகுதியில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தொடர் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதன் எதிரொலியாக, தேர்தல் அதிகாரிகளையும் ஒருவர் பின் ஒருவராக மாற்றப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் தரப்பினர் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துவதாக அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக, இரட்டை இலை சின்னத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்து பதிலளிக்க அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 6) காலை 11 மணிக்குள் இதற்கான பதிலை அளிக்க வேண்டும் என்றும் அவகாசம் அளித்துள்ளது.

மூலக்கதை