மஹிந்த ராஜபக்ச நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பது பற்றி கனவு காண்கின்றார்-பிரதமர் ரணில்.

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
மஹிந்த ராஜபக்ச நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பது பற்றி கனவு காண்கின்றார்பிரதமர் ரணில்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரைவில் கண்ணீர் சிந்த நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

இரண்டு வெசாக் பௌர்ணமி தினங்களில் இந்த நல்லாட்சி அரசாங்கம் கவிழ்க்கப்படும் என மஹிந்த சூளுரைத்துள்ளார்.

அவ்வாறு சூளுரைத்த மஹிந்த விரைவில் கண்ணீர் சிந்த நேரிடும்.

மஹிந்த ராஜபக்ச காலத்திற்கு காலம் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பது பற்றி கனவு காண்கின்றார். எனினும், அது யதார்த்தமில்லை.

நாட்டின் அபிவிருத்தியை வலுப்படுத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை