கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 28 பொதுமக்கள் பலி
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய போர் விமானங்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 28 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.
இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து சிரிய விமானப்படையினரின் போர் விமானங்கள் டோவுமா, சாப்குவா ஆகிய பகுதிகளில் வான்வெளி தாக்குதலை நடத்தினர்.
ஆனால், இந்த தாக்குதலில் சுமார் 28 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது. இதில், குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவார்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக இது வரை சுமார் 3,20,000 பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும், 10 லட்சத்தினருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சொந்த இடத்தைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
