கொலம்பியா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு – 100 பேருக்கும் அதிகமானோர் மாயம்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
கொலம்பியா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு – 100 பேருக்கும் அதிகமானோர் மாயம்

கொலாம்பியா நாட்டில் நேற்று முந்தினம் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள புட்டுமயோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், நதிகளின் ஓரம் உள்ள பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று முந்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 93 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது.

மேலும், பல பேர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போயுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 250-க்கும் மேற்பட்ட சடலங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், 100-க்கும் அதிகமானோர் பற்றிய தகவல்கள் இன்னமும் கிடக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இம்மாகாணத்தில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி சுமார் 100 பேர் பலியாகி வருகின்றனர் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை