விமலின் பிணைமனு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிப்பு

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
விமலின் பிணைமனு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பிணைமனு மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவினால் பிணை வழங்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேற்படி பிணை மனுவே இன்று (திங்கட்கிழமை) நிராகரிக்கப்பட்டுள்ளது. தனக்கு பிணைமனு வழங்கக்கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்ட விமல் வீரவன்ச உடல்நலக்குறைவு காரணமாக  தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை